Dinavel News Today # கோவை தூயதமிழ் இளையோர் பாசறைதமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்துடன் இணைந்து19.07.2020 அன்று நண்பகல் 3.30 மணியளவில், "சூம் செயலி" வாயிலாக பெருமையுடன் மூன்றாவது தூயதமிழ் இளையோர் கருத்துரை அமர்வு சிறப்பாக நடத்தியது



கோவை தூயதமிழ் இளையோர் பாசறை
தமிழ்நாடு அரசு  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்துடன் இணைந்து
19.07.2020 அன்று நண்பகல் 3.30 மணியளவில், "சூம் செயலி" வாயிலாக பெருமையுடன் மூன்றாவது  தூயதமிழ் இளையோர் கருத்துரை அமர்வு சிறப்பாக நடத்தியது.  அமர்வில் பத்து மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் இருபத்தி மூன்று அகவைக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் முறையே 
1. க.ஆஷா, சிவகங்கை 
2.சே.புவன்குமார், திருவண்ணாமலை
3.மே.மு.மணிமாறன், திருவள்ளூர்
4.சா.இலக்கியா, புதுக்கோட்டை 
5.ர.பாலஸ்ரீகரன், திருநெல்வேலி 
6.செ.அழகுவேல்@அழகர், விழுப்புரம் 
7.பூ.கீர்த்தனா, பெரம்பலூர் 8.த.தங்கமுத்து, தர்மபுரி
9.மு.சந்தோஷ் குமார், கிருஷ்ணகிரி 
10.ஜோ.கேத்ரின்மெர்லின, திண்டுக்கல்  ஆகியோர் கலந்து கொண்டு "தூயதமிழ் பேசுவதில் இளையோர் காணும் சிக்கல்களும் தீர்வுகளும்" என்ற பொருண்மையின் கீழ் சிறப்பாக உரையாற்றினர்... இந்த மூன்றாவது இளையோர் கருத்துரை அமர்வு முறையாக தமிழ் வாழ்த்தோடு தொடங்கியது. கருத்துரை அமர்வில் அத்தனை தமிழ்ச் சொந்தங்களையும் இனிதே வரவேற்றதுடன் அமர்வினையும் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
தமிழ்நாடு அரசு - அகரமுதலித் திட்ட இயக்ககத் தூய தமிழ்ப் பரிசாளர், தூய தமிழ் இளையோர் பாசறையின் நிறுவனர். சி.தமிழ் மணிகண்டன் அவர்கள். பிறகு தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் திரு. தங்க காமராசு ஐயா அவர்கள் தலைமையேற்று, தலைமையுரை வழங்கினார். பின்பு கருத்துரை அமர்வில் கலந்து கொண்ட மொழியாக்க வல்லுநர் திரு.மதிவாணன் ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தொகுப்பாளர் திருமதி. ஜெ. சாந்தி அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை நவின்றார்.

மூன்றாவது இணையவழி இளையோர் கருத்துரை அமர்வில் இலண்டன், துபாய், கொரியா, சிங்கப்பூர், கோவா மற்றும் குவைத் போன்ற அயல்நாட்டுத் தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்ந்த ஆர்வலர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
அமர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பற்றாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமர்வு பதிவு செய்யப்பட்டு வலைஒளியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அமர்வை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்து கோவை தமிழ் மணிகண்டன் மற்றும் திவாகர் நெறிப்படுத்தினர்.
குறிப்பாக, தமிழகத்தில் இதுவரை 26 மாவட்டங்களில் 30 தூயதமிழ் இளைஞர்கள் அடையாளப்படுத்தப் பட்டிருப்பது சிறப்புக்குரியது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா