# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா


கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில்  அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா


 சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கே.ஏ.நாச்சியப்பா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 24.1.2020 அன்று அறிவுத் திறன் வகுப்பறை  துவங்கப்பட்டது.  இப்பள்ளியில் 570 மாணவர்கள் படித்துக் கொண்டு வருகிறார்கள் .  இப்பள்ளியில் முதன்முதலாக  சென்னை - திருமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் நல அறக்கட்டளை  சார்பில் அறிவுத் திறன் வகுப்பறை துவங்கப்பட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு துவங்கப்பட்டது .  எடப்பாடி கல்வி மாவட்ட -மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.ம.விஜயா அவர்களும் கொங்கணாபுரம் ஒன்றிய சேர்மன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  திரு K.K. மணி அவர்களும் மற்றும் அறக்கட்டளையின் சார்பாக சமூக சேவகரும் தினவேல் நாளிதழ் சேலம் தெற்கு நிருபர் திரு பிரபு அவர்களும் கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.செந்திலாதிபன் அவர்கள் அனைவரையும் வரவேற்று இவ்விழாவை சிறப்பாக நடத்தினர்.  மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அறிவுத் திறன் வகுப்பறையை பயன்படுத்தி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள விருந்தினர்கள் அனைவரும் மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்தி பேசினர்

தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

Comments