# தினவேல் செய்திகள் # வேலூரில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முயற்சிக்கப்படும் என்று உரம் மற்றும் ரசாயன பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்பி கூறினார்.
வேலூரில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முயற்சிக்கப்படும் என்று உரம் மற்றும் ரசாயன பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்பி கூறினார்.
தமிழக வேளாண் துறையும் எம் எப் எல் உர நிறுவனமும் இணைந்து கனிமொழி எம்பி தலைமையிலான கதிர் ஆனந்த் வசந்தகுமார் உள்பட 11 பேர் கொண்ட பாராளுமன்ற நிலைக்குழு மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார் எம் எப. எப். எல். முதன்மை மேலாண்மை இயக்குனர் சரவணன் வரவேற்றார் இதில் கனிமொழி எம்பி பேசுகையில் இங்கு உங்களையெல்லாம் சந்தித்து உங்க பிரச்சினைகள் சிரமங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உருமாற்றும் ரசாயனம் பார்லிமென்ட் நிலைக்குழு வந்துள்ளது உங்கள் பிரச்சினைகளை தயக்கமின்றி சொன்னால்தான் அதை புரிந்துகொண்டு மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி உங்கள் தேவைகளுக்கு தீர்வு காண முடியும் என்று கூறினார் இதில் விவசாயிகள் கூறிய குறைகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் எந்த கடை என்று குறிப்பிட்டு சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வாட்ஸ்அப் உள்ளது அந்த எண்ணில் புகார் போட்டோ வீடியோ போட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார் இதனைத்தொடர்ந்து கனிமொழி உள்பட நிலைக் குழு உறுப்பினர்களுக்கு கலெக்டர் நினைவுப்பரிசு வழங்கினார்.
Comments
Post a Comment