# DINAVEL NEWS # கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் 11 ம் நாளாள் தை திருவிழாவின் நிறைவு நாளாக இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிடத் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அய்யா வழி பக்தர்கள் வருகை தந்தனர்.




மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி மாவட்டம்  சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில்  11 ம் நாளாள் தை திருவிழாவின் நிறைவு நாளாக இன்று தேர் திருவிழா நடைபெற்றது.   இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிடத் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அய்யா வழி பக்தர்கள் வருகை தந்தனர். 



கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும், யுகப்படிப்பு,  பஜனை, கலிவேட்டையாடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. 11 நாட்கள் தை திருவிழாவன நிறைவு நாள் விழாவான இன்று தேர் திருவிழா  நடைபெற்றது. தலைமை பதியில் இருந்து பல்லாக்கில் ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளிய அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து   திருவிழாவிற்கு வருகை தந்த அய்யா வழிமக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று  அய்யாவை பக்தர்கள் பூ பழம் போன்ற சுருள்வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் திரு விழா நடைபெற்றது. இவ் விழாவில்  குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிடத் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அய்யா வழி பக்தர்கள் வருகை தந்தனர்.  மாலை கலைநிகழ்ச்சி மற்றும் அன்னதானத்துடன் தை திருவிழா நிறைவு பெறும்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.