# DINAVEL NEWS# மாநில ஊராக வளர்ச்சி மற்றும் மாநில ஊராட்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பாக வெற்றி பெற்ற பஞ்சயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான நிர்வாக அறிமுக பயிற்ச்சி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.


மணிகுமார்
நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான நிர்வாக அறிமுக பயிற்ச்சி முகாம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தொடங்கி வைத்தார். இதில் கிராம நிர்வாக தன்மை, கிராம சபை கூட்டம், கிராம வளர்ச்சி திட்டங்கள் ஆகியன குறித்து பயிற்ச்சிகள் அளிக்கபட்டது. 

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  மாநில ஊராக வளர்ச்சி மற்றும் மாநில ஊராட்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பாக வெற்றி பெற்ற பஞ்சயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான   நிர்வாக அறிமுக பயிற்ச்சி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த  பயிற்ச்சி முகாம் நாகர்கோவில்,தக்கலை ஆகிய இரு இடங்களில் இன்று நடைபெற்றது. நாகர்கோவிலில் நடைபெற்ற முகாமை  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தொடங்கி வைத்தார். இதில் கிராம நிர்வாக தன்மை, கிராம சபை கூட்டம், கிராம வளர்ச்சி திட்டங்கள் ஆகியன குறித்து பயிற்ச்சிகள் அளிக்கபட்டது. அடுத்த கட்டமாக  மண்டல மற்றும் மாநில ஊராட்சி நிறுவனங்கள் சார்பாக 5   நாட்கள் பயிற்ச்சி முகாம் விரைவில நடைபெற்றும் என்றும் ஊராட்சி உதவி இயக்குனர் செய்யதுஅலி செய்தியார்களிடம் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் 95 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அதன் மூலம் தலைவர் துணை தலைவர் உட்பட 190  பேர்கள்  பயிற்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் பேசிய  மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் மு. வடநேரே, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக திகளுவதே பஞ்சயத்து நிர்வாகம் என குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா