# DINAVEL NEWS # குளங்களை தூர்வாருவதாக அரசு அறிவித்து விட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குளங்களை தூர் வாராரததால் விவசாய்கள் மற்றும் ஊர் மக்கள் வேதனை


மணிகுமார்
நாகர்கோவில்


குளங்களை தூர்வாருவதாக அரசு அறிவித்து விட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குளங்களை தூர் வாராரததால் விவசாய்கள் மற்றும் ஊர் மக்கள் வேதனை - அரசை எதிர்த்து போராட்டங்கள் பண்ணுவதற்கு பதிலாக அரசை எதிர்பார்க்காமல் 200ஏக்கர் பரப்பரபளவு கொண்ட  கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த தேரூர் குளத்தை ஊர் மக்களே தூர்வாரிய சுத்தம் செய்த சம்பவம் பெரும் வரவேற்ப்பை பெற்று உள்ளது.  ஊர் முதியவர்களுக்கு மருத்துவ முகாமும் நடத்தபட்டது. 
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து குளங்களையும் தூர் வரப்படும் என அரசு தரப்பில் அறிவித்து அது வெறும் அறிவிப்போடு நின்று விட்டது இதனால் ஒட்டு மொத்த விவசாய்களும் பொது மக்களும் வேதனை அடைந்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்   சுசீந்திரம் அடுத்த தேரூர் பகுதியில் சுமார் 200ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான தேரூர் குளம் உள்ளது. இந்த குளத்தை நம்பி பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக குப்பை சேர்ந்து தூர்வாரப்படாமல் தண்ணீர் தேக்கம் குறைவாக காணப்பட்டது. அதுமட்டுமல்ல ஆகாய தாமரை படர்ந்து குளத்தில் யாரும் குளிக்க குளிக்க கூட குளத்தில் இறங்க முடியாமல் குளம் பயன் பாட்டிற்கு இல்லமால் ஆனது. பல  முறை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் குளத்தை தூர் வார எந்த நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை என ஊர் மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அரசை எதிர்த்து போராட்டங்கள் பண்ணுவதற்கு பதிலாக அரசை எதிர்பார்க்காமல் 200 ஏக்கர் பரப்பரபளவு கொண்ட  கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த தேரூர் குளத்தை ஊர் மக்களே தூர்வாரிய சுத்தம் செய்த சம்பவம் பெரும் வரவேற்ப்பை பெற்று உள்ளது.  ஊர் முதியவர்களுக்கு மருத்துவ முகாமும் நடத்தபட்டது. தேரூர் கிராம இளைஞர்களின் இந்த முயற்சியை பார்த்து அக்கம் பக்கம் உள்ள கிராம மக்களும் அரசை எதிர்பார்க்காமல் தங்கள் ஊர்களில் உள்ள குளங்களை தூர் வாரி சுத்தபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக இந்த ஊர் இளைஞர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா