# DINAVEL NEWS # முதல்வரின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளன இதனால் பயன் அடைந்த பயனாளிகள் முதல்வருக்கு நன்றி.



வேலூர் மாவட்டம் வேலூர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொங்கல் விழா முன்னிட்டு 10, 25, 220, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன இதை தமிழகத்தில் ஏழை மக்கள் பொங்கல் பண்டிகையை சீரும் சிறப்புடனும் கொண்டாடும் வகையில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவின் பேரில் கடந்த 28. 11. 2019 அன்று ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது அதாவது ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சக்கரை இரண்டடி நீள கரும்புத் துண்டு 20 கிராம் முந்திரி 20 கிராம் திராட்சை 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பாக இது துவங்கப்பட்டது கடந்த ஆண்டில் முதல்வர் ஒரு படி சென்று பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப் பணத்தையும் கொடுத்தார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10, 25, 220 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வரின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளன இதனால் பயன் அடைந்த பயனாளிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் குடியாத்தம் தாலுகா கே. வி. குப்பத்தில் வசிக்கும் அனிதா கூறுவது நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்களால் பொங்கல் விழாவை கொண்டாடும் சூழலில் |இல்லை எனவே பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தமிழக முதல்வர் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் பரிசினையும் கொடுத்ததால் பொங்கல் விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடினோம் என்று முதல்வருக்கு நன்றி கூறினார் அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே நவல் பூரில் வசிக்கும் சித்ரா கூறியது எனது கணவர் காலமாகிவிட்டார் நான் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன் நான் பூ வியாபாரம் செய்கிறேன் அரசு கொடுத்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணத்தை கொண்டு இந்த ஆண்டில் இரண்டு குழந்தைகளும் நானும் மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடினோம் தமிழக முதல்வருக்கு நன்றி  கூறினார் .

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.