# தினவேல் செய்திகள் # கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளரிடம் கூறினார்.


படம் :குற்றவாளி : தவ்பிக் தாயார்



மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளரிடம் கூறினார். சிசிடிவி காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது அந்த காட்சிகளில் இருப்பது எனது மகன் அல்ல மகனைக் காணவில்லை என கடந்த மாதம் 18 ஆம் தேதியே நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலைத்தில் புகார் அளித்தேன் என சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தவ்பிக் தாயார் பேட்டி. நாகர்கோவில் நீதி மன்ற  மாவட்ட முதன்மை நீதிபதி அருள் முருகன் போலிஸ் விசாரணைக்கான  மனு மீதான தீர்ப்பு நாளை மாலை மூன்று மணிக்கு ஒத்தி வைத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.
  கன்னியாகுமரி மாவட்டம்   களியக்காவிளையில் சிறப்பு உதவியாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர் இன்று அவர்களை பாதுகாப்பு கருதி குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுதாமல் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாகர்கோவில் நீதி மன்ற  மாவட்ட முதன்மை நீதிபதி அருள் முருகன் போலிஸ் விசாரணைக்கான  மனு மீதான தீர்ப்பு நாளை மாலை மூன்று மணிக்கு ஒத்தி வைத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.
அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா தனது வாதத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் துன்புறுத்த  வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருவரும் போலீஸ் காவலில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த முடிவு நாளை மதியம் மூன்று மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் ஞானசேகர் செய்தியாளரிடம் கூறும்போது இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர்களை காணவில்லை என ஏற்கனவே ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்  கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார் ஆனால் அது தொடர்பாக எந்த ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை இதேபோன்று போலீசார் அவரை துன்புறுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் அவர்களை போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று கூறினார் ஆனால் இது தொடர்பாக விசாரணை அதிகாரி முழு உத்தரவாதம் அளித்துள்ளதால் அவர் துன்புறுத்த வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் எனவே நாளை அவர்கள் 28 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது அந்த காட்சிகளில் இருப்பது எனது மகன் அல்ல மகனைக் காணவில்லை என கடந்த மாதம் 18 ஆம் தேதியே நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலைத்தில் புகார் அளித்தேன் என சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தவ்பிக் தாயார் பேட்டி.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா