# DINAVEL NEWS # கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பேரணி.
மணிகுமார்
நாகர்கோவில்
இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பேரணி.
பால்பண்ணை அருகே பேரணியாக துவங்கி வந்து ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம். ஏராளமான போலீசார் குவிப்பு. வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடபட்டன.
இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பு நிறுவனங்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் என பல்வேறு தரப்புகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று நாகர்கோவிலில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. அரசு பால்பண்ணை அருகே இருந்து பேரணியாக புறபட்டு வந்து ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான போலீசார் குவிக்கபட்டனர். வாகனங்கள் அனைத்தும் மாற்று வழிகளில் திருப்பி விடபட்டன.
Comments
Post a Comment