#DINAVEL NEWS# கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி இணைந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்



மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி இணைந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
 மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் இந்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நியாயம் கிடைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், திமுக எம்எல்ஏக்கள் சுரேஷ் ராஜன், ஆஸ்டின்,  கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் பாதிரியார்கள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்.
 இந்த போராட்டத்தின் காரணமாக கலெக்டர் அலுவலக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா