#DINAVEL NEWS# கன்னியாகுமரிதேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப்பேரணி கொட்டாரம் ஜங்ஷன் முதல் காந்தி மண்டபம் வரை நடைபெற்றது



மணிகுமார்
கன்னியாகுமரி


கன்னியாகுமரி
தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப்பேரணி கொட்டாரம் ஜங்ஷன் முதல் காந்தி மண்டபம் வரை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும்  31வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி உட்கோட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள்  100க்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணிந்தபடி கொட்டாரம் ஜங்ஷன் முதல் கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரையிலான 5 கிலோமீட்டர்  தூரம் பேரணியாக சென்று ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியை கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி பெருமாள்புரம், பஞ்சலிங்கபுரம் ரவுண்டானா, விவேகானந்தபுரம் ஜங்ஷன் வழியாக காந்திமண்டபத்தை அடைந்தது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா