# DINAVEL NEWS # வேலூர் முழுவதும் குற்றச் செயல்களை தடுக்க ரூபாய் 72 லட்சம் மதிப்பில் சிசிடிவி மாவட்ட ஆட்சியர் தகவல்..



வேலூர் முழுவதும் குற்றச் செயல்களை தடுக்க ரூபாய் 72 லட்சம் மதிப்பில் சிசிடிவி மாவட்ட ஆட்சியர் தகவல்....


காட்பாடி பி சி கே நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சிசிடிவி கேமரா தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார் முன்னாள் நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் கலெக்டர் சண்முகசுந்தரம் எஸ்.பி. பிரவேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிசிடிவி கேமராக்களை தொடக்கிவைத்த வைத்தனர் பின்னர் கலெக்டர் கூறி பேசியதாவது குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் பாதுகாப்பை பலப்படுத்தும் சுமார் 4.5 லட்சம் செலவில் 27 கண்காணிப்பு கேமராக்கள் இந்த பி சி கே நகர் முழுவதும் அமைத்துள்ளது வரவேற்கக் கூடிய ஒன்று மாநகரில் உள்ள சாலைகள் பெரும்பாலும் சிமெண்ட் சாலைகளாக உள்ளது இந்த சாலைகளில் ஓரம் பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் இதனால் தட்பவெப்ப நிலை மாறுபாடு ஏற்பட்டு சரியான தட்ப வெப்பநிலை நிலவும் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் மனு அளித்தால் இந்தப் பகுதிகளுக்குத் தேவையான சிறுவர் பூங்கா விளையாட்டு மைதானம் சிறிய அளவிலான நீச்சல் குளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் அரசின் சார்பில் திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்கள் பராமரிப்பில் விட்டுவிட்டால் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் பகல் நேரத்தில் குழந்தைகளை வெளியே விளையாட விடுங்கள் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்காதீர் வெளியில் காற்றோட்டமான சூழ்நிலையில் விளையாடினால் தான் அவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள் வேலூர் மாநகர் முழுவதும் காவல்துறை சார்பிலும் 24 லட்சம் மதிப்பிலும் அரசு சார்பிலும் 48 லட்சம் மதிப்பிலும் மொத்தம் 72 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் இவ்வாறு பேசினார் பின்னர் நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார் பேசுகையில் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பெண்கள் முதியவர்கள் தங்கள் செல்போனில் காவலன்  எஸ் ஓ எஸ் ஆப் ஐ டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் குறிப்பாக பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்க வகையில் இந்த ஆப் இல் உள்ள சிவப்பு நிற பட்டனை அழுத்தினால் உடனே அங்கு பணியில் உள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தில் உள்ள பெண்கள் முதியோர்கள் உட்பட அனைவருக்கும் ஒருவன் முதல்வர் என்றார் பின்னர் நிகழ்ச்சியில் பின்கோடு குழுவினர் காவலனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் காட்பாடி டிஎஸ்பி துரைபாண்டியன் தாசில்தார் பாலமுருகன் இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி முடிவில் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் சந்திரன் ஆகியோர் நன்றி கூறினர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா