# DINAVEL NEWS # குடியரசு தின விழாவில் மனித உரிமை பாதுகாப்பு சமூக நல அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தனர்.
மணிகுமார்
நாகர்கோவில்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலை மார்க்கமாக இனைப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வான் வழியாக இனைப்பை ஏற்படுத்த கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் அமைத்து தர வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மனித உரிமை பாதுகாப்பு சமூக நல அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தனர். அடுத்த ஆண்டு குடியரசு தினத்திற்கு முன் சர்வதேச சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இந்த திட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தி சூளுரை.
நாடு முழுவதும் 71 ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடபட்டது. அரசு சார்பில் இந்த விழாக்கள் கொண்டடபடுவது போலவே சமூக நல அமைப்புகளும் குடியரசு தின விழாவினை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மனித உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில்குடியரசு தின விழா கொண்டடபட்டு பொது மக்களுக்கு இனிப்புகளும் இலவச சேலைகளும் வழங்கப்பட்டன. பின்னர் விழாவில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலை மார்க்கமாக இனைப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வான் வழியாக இனைப்பை ஏற்படுத்த கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் அமைத்து தர வேண்டும், சர்வதேச சுற்றுலா மையமாக கன்னியாகுமரிக்கு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவதால் அடுத்த ஆண்டு குடியரசு தினத்திற்கு முன் இந்த திட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தி சூளுரைத்தனர்.
அதுமட்டுமின்றி குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 211 பேர்கள் பலியாகி உள்ளனர். இதற்கு தலைகவசம் அணிந்தால் விபத்தை தவிர்க்கலாம் என அரசு தரப்பில் கூறபட்டு வருகின்றன. ஆனால் குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு இல்லாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறிய இந்த அமைப்பினர், விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க குடியரசு தின விழாவில் சூளுரைப்பதாக தெரிவித்தனர்.
Comments
Post a Comment