# DINAVEL NEWS# பொதுமக்கள் மத்தியில் கலாச்சாரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ தஜ் விஜயன்(31) என்பவர் குமரி முதல் காஷ்மீர் வரையில் மேற்கொண்ட சைக்கிள் சாதனை பயணத்தை இன்று கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.



மணிகுமார்
நாகர்கோவில்


பொதுமக்கள் மத்தியில் கலாச்சாரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ தஜ் விஜயன்(31) என்பவர் குமரி முதல் காஷ்மீர் வரையில் மேற்கொண்ட சைக்கிள் சாதனை பயணத்தை இன்று கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.             

கன்னியாகுமரி.ஜன.27.
கன்னியாகுமரி மாவட்டம் சிதறாலை சேர்ந்தவர் ஸ்ரீ தஜ் விஜயன்(31). எம்எஸ்ஸி பட்டதாரியான இவர் நாகர்கோவிலில் சுய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நம் தேசத்தின் உணவு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை சீர்படுத்தவும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றைக்குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைய தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் வகையிலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான சுமார் 4000 கிலோமீட்டர் தூரத்தை  சைக்கிளில் கடந்து சாதனை பயணம் மேற்கொண்டார். இந்த சாதனை  பயணத்தை இன்று அவர் கன்னியாகுமரியில்   நிறைவு செய்தார். அவருக்கு பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கன்னியாகுமரியில் உற்சாகமான வரவேற்பளித்து பூச்செண்டு கொடுத்தும் இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.