# DINAVEL NEWS # வேலூர் மாவட்டம்- ஜெயில் கைதிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது:டி.ஐ.ஜி காமினி பேச்சு.
வேலூர் மாவட்டம்
- ஜெயில் கைதிகளிடம் பாகுபாடு காட்டக் கூடாது:டி.ஐ.ஜி காமினி பேச்சு
வேலூர் சிறைத்துறை காவலர் பயிற்சி மையத்தில் (APCA) ஜெயில் அதிகாரிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் திங்கட்கிழமை தொடங்கியது.வேலூர் சரக டிஐஜி காமினி குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது,இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஜெயில் கைதிகளுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் உள்ளது ஆனால் அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது.ஜெயிலில் உள்ள கைதிகளிடம் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது .அவர்களுடைய மதம் மற்றும் நிறம் சார்ந்த பாகுபாடு காட்டாமல்* நடந்துகொள்ளவேண்டும்.கைதிகளுக்கு மனித உரிமைகள் அனைத்தும் உள்ளது அதனை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறைத்துறை காவலர் பயிற்சி மைய இயக்குனர் சந்திரசேகர் இணை இயக்குனர் கருப்பணன்,சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில் தமிழ்நாடு ,தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத், நாகாலாந்து ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
Comments
Post a Comment