DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
கன்னியாகுமரி அரசுபழத்தோட்டத்தில் தயாராகும்
சாக்லேட்
கன்னியாகுமரி டிச 10
கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
சாக்லேட்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி சாப்பிடும் இனிப்பு வகை.5 ரூபாயிலிருந்து தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை அதன் தரவரிசை உள்ளது.சர்வதேச நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சாக்லேட்க்கள்,பெருநகரம் தொடங்கி குக்கிராமம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கண்ணைகவரும் பேக்கிங்,சுவை,விளம்பரம் என ஆண்டுக்கு கோடிகணக்கான ரூபாய்க்கு சாக்லேட் வர்த்தகம் நடக்கிறது.
ஆனால் சர்வதேச தரத்தில் தயாராகும் இந்த சாக்லேட்டுக்கு இணையாக நமது ஊரில் சப்தமின்றி தயாராகிறது.
கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் தனியாக யூனிட் அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற பெண் ஊழியர்களால் சுகாதாரமான தயாரிக்கபடுகிறது.சர்வதேச கம்பெனி போல் எந்த ஒரு விளம்பரம் இல்லாமலேயே பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த சாக்லேட்.
இதுகுறித்து கன்னியாகுமரி அரசுபழத்தோட்ட மேலாளர் கூறியதாவது:-
தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்துறை மூலம் சாக்லேட் யூனிட் தொடங்கப்பட்டுள்ளது.தற்போது மில்க்சாக்லேட்,டார்க் சாக்லேட் என இரண்டு சுவையான சாக்லேட் தயார்செய்து வருகிறோம்.இதில் டார்க்சாக்லேட் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் தயார்செய்கிறோம்.இதற்காக விவசாயம் சார்ந்த பட்டயபடிப்பு பெற்று இதற்காக சென்னை,மாதவரத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் தயார் செய்கின்றனர்.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தகூடாது என்பதால் பேப்பரில் செய்யப்பட்ட பேக்கிங் பயன்படுத்துகிறோம்.தற்போது கொரோனா காரணமாக எக்கோபார்க் திறக்காததால் சாக்லேட் விற்பனை சற்று குறைந்துள்ளது.மேலும் வெளிமார்க்கெட்டில் சாக்லேட் விற்பனைக்கு அனுப்பவில்லை.இங்கு தயாராகும் சாக்லேட் கோகோ,சுகர்,மற்றும் பட்டர் போன்ற மூலபொருட்கள் பயன்படுத்தப்பட்டு சுகாதாரமான முறையில் தயார் செய்து வருகிறோம்.50 கிராம் எடையுள்ள இந்த சாக்லேட் குறைந்த பட்ச விலையாக 50 ரூபாயும்,அதிகபட்ச விலையாக 60 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு தேவைக்கு அரசு பழத்தோட்டத்தில் உள்ள சாக்லேட் யூனிட்டை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
Comments
Post a Comment