DINAVEL DAILY # குமரியில் ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை. ஏஜென்சி உரிமையாளர் மீது வழக்கு பதிவு.


கன்னியாகுமரி: டிச 10

குமரியில் ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை. ஏஜென்சி உரிமையாளர் மீது வழக்கு பதிவு.

நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரொமால்டு ஓயிட்ஸ் (45). இவர் ராமன்புதூர் பகுதியில் ரயில் ,பஸ் போன்றவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். 

இவரது ஏஜென்சி நிறுவனத்தில் நாகர்கோவில் ரயில்வே மத்திய பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உபேந்திர குமார் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர் .

அப்போது அங்கிருந்து இரண்டு கம்பியூட்டர்களை ஆய்வு செய்தபோது, ஆன்லைனில் பல்வேறு போலி ரயில்வே கணக்குகள் தொடங்கி அதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கிருந்த 42 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 63 ஆயிரம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏஜென்சி உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள ரொமால்டு ஒயிட்ஸை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா