DINAVEL DAILY # தேர்தல் வாக்காளர் சேர்த்தல்,நீக்கல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


தேர்தல் வாக்காளர் சேர்த்தல்,நீக்கல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.  

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் ஊராட்சி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், மற்றும் முகவரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணிநடைபெற்றது.          

பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு துணை வட்டாச்சியர் ஜெயச்சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு,விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தேர்தல் குறித்த சைக்கிள் பேரணியை வருவாய் வட்டாச்சியர் சையதுஅபுதாகீர் தொடங்கி வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள்,பயணிகள் உட்பட பலருக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர்கள் வினோத்கண்ணாகுட்டி, ராசு,பட்டதாரி ஆசிரியர் வீரமணி,கணினி ஆபரேட்டர் சுதாகர்,மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.