DINAVEL DAILY # குமரி அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.! விஜிலா சத்தியானந்த் எம்.பி பங்கேற்றார்


குமரி அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!
 விஜிலா சத்தியானந்த் எம்.பி பங்கேற்றார்;

கன்னியாகுமரி:டிச 10

குமரி மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக விஜிலா சத்தியானந்த் எம்பி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தில் 2021சட்டமன்ற தேர்தலை மகளிர் அணி சார்பில் எவ்வாறு எதிர்கொள்வது எனவும், அதிமுக அரசின் சாதனைகளை அனைத்து இல்லங்களுக்கும் மகளிரணி சார்பில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது.

இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ,மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜான் தங்கம் மாவட்ட மகளிரணி செயலாளர் கெப்சி பாய், வர்த்தக அணி, மாவட்டச் செயலாளர் ஜெஸீம் ஒன்றியச் செயலாளர்கள் அழகேசன்,கிருஷ்ணகுமார், பேரூர் செயலாளர்கள் ராஜபாண்டியன், மனோகரன், சீனிவாசன், இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் லட்சுமி சீனிவாசன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா