DINAVEL DAILY # தொடரும் தற்கொலைகள்


தொடரும் தற்கொலைகள்...

நேற்றைய செய்தியைப் பார்த்தபோது ஒரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி ஒரு சின்னத்திரை நடிகை என்றோ, ஒரு செலிபிரட்டி என்றோ அல்ல.
ஒரு சின்ன வயது; வெறும் 28 வயது தான் ஆகிறது. தற்போது தான் அவர் வாழ்க்கையின் உச்சத்தை தொட தொடங்கியுள்ளார்.

அத்தகைய சூழலில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சுஷாந்த் சிங் என்ற வாலிபரும் இதேபோல் தான். நம் கண்களுக்கு இவர்கள் போன்ற பிரபலங்கள் மட்டுமே தெரிகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியாத இன்னும் எத்தனையோ ஊர்களிலும், மாவட்டங்களிலும் சிறிய வயதுடைய பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது வேதனையான விஷயம். நம் பிள்ளைகளை நாம் கவனிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவர்களோடு உரையாடுங்கள்.

நம் பிள்ளைகளோடு மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் வாழும் சூழல் சரியில்லை எனினும் அவர்களுக்கு அன்பால் புரியவையுங்கள். 

எந்த நேரமும் நிதானம் இழந்து பேசாதீர்கள். நம் பிள்ளைகளின் எதிர்காலம் தான் முக்கியம். அவர்களுக்காக வாழ்வோம். அவர்களோடு வாழ்வோம்.

*தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என உணர்த்துங்கள்.*
 தைரியத்தை கொடுங்கள். நாங்கள் இருக்கிறோம்.. என்று நம்பிக்கையை ஊட்டுங்கள்.

*வாழ்க்கை முள்ளாய் குத்தும் போது ரோஜாக்களும் தற்கொலை செய்து விடுகிறதே.!*

ஆழ்ந்த அனுதாபங்கள் சின்னத்திரை சித்ரா...

தொகுப்பு:
பா. சீனிவாசன், வந்தவாசி.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.