DINAVEL DAILY # குமரியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் நெஞ்சுவலியால் சாவு. கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கன்னியாகுமரி: டிச 10

குமரியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் நெஞ்சுவலியால் சாவு. கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரத்தை சேர்ந்த மீனவர் ததேயூஸ் (43). இவர் உட்பட 5 பேர் ஜோன்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் ஆரோக்கியபுரம் கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர்.

இவர்கள் நடுக்கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ததேயூசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் படகில் சுருண்டு விழுந்த அவர் துடிதுடித்து அங்கேயே பரிதாப உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து அவருடன் சென்றவர்கள் அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.