DINAVEL DAILY # கன்னியாகுமரி டிச 7புதிய நாடாளுமன்ற கட்டிடத் திற்காக செலவிடும் நிதியை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் செலவிட மத்திய அரசு முன் வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் கருத்து.சட்ட மேதை அம்பேத்கரின் 64 வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததால் வீதிக்கு வந்த டெல்லியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கொரோனாவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உட்பட பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளதை கண்டித்தார். நாடாளுமன்ற கட்டிடத்துக்காக செலவிடும் பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தொகுதி வளர்ச்சிக்கு பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும், ரஜினிகாந்த் கட்சியை துவங்கினாலும் அவர் எந்த கூட்டணியில் இணைந்தால் தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி எனவும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் கூறினார்.



கன்னியாகுமரி டிச 7

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திற்காக செலவிடும் நிதியை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் செலவிட மத்திய அரசு முன் வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் கருத்து.

சட்ட மேதை அம்பேத்கரின் 64 வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
 விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததால் வீதிக்கு வந்த டெல்லியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கொரோனாவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உட்பட பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளதை கண்டித்தார். நாடாளுமன்ற கட்டிடத்துக்காக செலவிடும் பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தொகுதி வளர்ச்சிக்கு பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும், ரஜினிகாந்த் கட்சியை துவங்கினாலும் அவர் எந்த கூட்டணியில் இணைந்தால் தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி எனவும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் கூறினார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா