DINAVEL DAILY # கேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு
கேடயம் திட்டம் மற்றும் VIRTUAL COP குறித்து விழிப்புணர்வு.!
இன்று 09.12.2020ந் தேதி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் மற்றும் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ரஞ்சனா மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி.கன்னியம்மாள் இணைந்து அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில்
கேடயம் திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் உதவி தொலைபேசி எண்கள் 6383071800 , 9384501999 குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் Virtual Cop குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 5 நபர்கள் தங்களது செல்போனில் Virtual COP App பதிவிறக்கம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மற்றும் வெர்ச்சுவல் காப்பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
Comments
Post a Comment