DINAVEL DAILY # தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வள்ளிமதுரை அணை உபரிநீரால் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை :மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா. உத்தரவு. அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா தெரிவித்தார்.தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணை நிரம்பிய நிலையில் தற்போது உபரி நீர் வெளியேறுகிறது. எனவே, வரட்டாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை பயன்படுத்தி ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, வள்ளிமதுரை அணையை தருமபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வள்ளிமதுரை அணையில் இருந்து கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி பகுதியிலுள்ள 20}க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்ப பாசன கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பு செய்து, ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.ரூ.11.06 கோடி மதிப்பிலான தார் சாலை ஆய்வு.பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி, செம்பியானூர், மோளையானூர், தேவராஜபாளையம், காந்திநகர், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ரூ. 11.06 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்த தார் சாலைகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், வட்டாட்சியர்கள் பார்வதி, செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், ராமஜெயம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். பட விளக்கம்...வள்ளிமதுரை வரட்டாறு அணையினை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா.சிற்றரசு அரூர்


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வள்ளிமதுரை அணை உபரிநீரால் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா. உத்தரவு.


 அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணை நிரம்பிய நிலையில் தற்போது உபரி நீர் வெளியேறுகிறது. எனவே, வரட்டாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை பயன்படுத்தி ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, வள்ளிமதுரை அணையை தருமபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வள்ளிமதுரை அணையில் இருந்து கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி பகுதியிலுள்ள 20}க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்ப பாசன கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பு செய்து, ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.
ரூ.11.06 கோடி மதிப்பிலான தார் சாலை ஆய்வு.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி, செம்பியானூர், மோளையானூர், தேவராஜபாளையம், காந்திநகர், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ரூ. 11.06 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்த தார் சாலைகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
  ஆய்வின்போது, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், வட்டாட்சியர்கள் பார்வதி, செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், ராமஜெயம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


 பட விளக்கம்...


வள்ளிமதுரை வரட்டாறு அணையினை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா.

சிற்றரசு 
அரூர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா