DINAVEL DAILY # வேல்யாத்திரைக்கு தடை எதிரொலி. பாஜகவினரை தடுத்து நிறுத்த குமரி சோதனைச் சாவடிகளில் போலீசார் குவிப்பு. அஞ்சுகிராமம் சோதனைச்சாவடியில் எஸ்பி. பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு.

வேல்யாத்திரைக்கு தடை எதிரொலி. பாஜகவினரை தடுத்து நிறுத்த குமரி சோதனைச் சாவடிகளில் போலீசார் குவிப்பு. 
அஞ்சுகிராமம் சோதனைச்சாவடியில் எஸ்பி. பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு. 

கன்னியாகுமரி டிச 7

வேலி யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் பாஜகவினரை தடுத்து நிறுத்த சோதனைச் சாவடிகள் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை எஸ்பி பத்ரிநாராயணன் ஆய்வு செய்தார். 

பாஜகவின் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவடைகிறது.ஆனால் வேல் யாத்திரைக்கு காவல்துறை சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று சட்டமேதை டாக்டர் அம்பேத்காரின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மாலை அணிவித்து தொண்டர்களிடையே உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் யாத்திரை நிறைவு செய்வதற்காக திருச்செந்தூருக்கு செல்வார்கள் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

வேல் யாத்திரைக்குச் செல்லும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் சோதனைச் சாவடிகள் மூலமாக தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் சோதனை சாவடிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான ஆரல்வாய்மொழி மற்றும் அஞ்சுகிராமம் சோதனைச்சாவடிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அப்போது திடீரென குமரி மாவட்ட எஸ்பி.பத்ரிநாராயணன் அஞ்சுகிராமம் காவல் சோதனைச் சாவடிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதனால் அப்பகுதிகளில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.