DINAVEL DAILY # குணகம்பூண்டி பள்ளியில் ஊரக புத்தாக்க திட்டம்


குணகம்பூண்டி பள்ளியில் ஊரக புத்தாக்க திட்டம்...

திருவண்ணாமலை, டிசம் 10: வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில், குணகம் பூண்டி ஊராட்சியில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த நிகழ்வு குண்ணகம்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை  சமூக ஆர்வலர்  கவிதா மற்றும் திட்டப் பணிக் குழு உறுப்பினர்களுடன்  கேட்டறிந்தனர். அப்போது பள்ளிக்கு தேவையான பிரிண்டர், நாற்காலிகள் மற்றும் பள்ளியின் நுழைவாயிலுக்கு முன்பாக ஒரு கழிவுநீர் செல்லும் கால்வாய் பாதை ஆகியன அமைத்து தரும்படி தலைமை ஆசிரியர் வ. மணி வேண்டுகோள் விடுத்தார். மேலும்  இவ்விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் ப. மனோகர் மற்றும் கணினி ஆசிரியர் பா. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.