DINAVEL DAILY # தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கைலாயபுரம் பொது மக்கள் மனைப் பட்டா கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பு


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கைலாயபுரம் பொது மக்கள் மனைப் பட்டா கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பு

அரூர், அருகே வீட்டு மனைப் பட்டா கோரி அரூர் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம் மத்தியம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கைலாயபுரம். இந்த ஊரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் (சர்வே எண் 28 / 1) சுமார் 30 குடும்பத்தினர் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள மக்கள் மின்சார இணைப்புகள், அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் பெறமுடியாமல் உள்ளனர். எனவே, கையலாயபுரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் நீண்ட வருடங்களாக குடியிருந்து வரும் மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் அரூர் வட்டாட்சியர் செல்வகுமாரிடம் 30 கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

சிற்றரசு
அரூர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.