DINAVEL DAILY # நாகியம்பட்டி கிராமத்தில், சாலைகளில் நடந்து செல்லக்கூட வழியின்றி, சேறும் சகதியுமாக இருப்பதால், கறுப்பு கொடிகளுடன், பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நாகியம்பட்டி கிராமத்தில், சாலைகளில் நடந்து செல்லக்கூட வழியின்றி, சேறும் சகதியுமாக இருப்பதால், கறுப்பு கொடிகளுடன், பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெங்கவல்லி ஒன்றியம், நாகியம்பட்டி ஊராட்சி, ஏ.டி., காலனி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை, பல ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தற்போது பெய்த மழையால், சாலை முழுவதும் ஏர் உழுதது போன்று சேறும், சகதியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் பலரும் அந்த வழியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் பல முறை கெங்கவல்லி ஒன்றியம், நாகியம்பட்டி ஊராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, அப்பகுதி பெண்கள், கறுப்பு கொடிகளை ஏந்தி வந்து, சேற்றில் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா