DINAVEL DAILY # தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 60 செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீன் குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் ஒப்படைத்தார்.
*தூத்துக்குடி மாவட்டம்:09.12.2020*
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 60 செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீன் குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 2019 முதல் இதுவரை காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளார் திரு. சுதாகரன், திரு. பெர்லின் பிரகாஷ், காவலர்கள் சாபு, சதீஷ்குமார், எடிசன் மற்றும் புவனேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து ஏற்கனவே கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
அதன் பிறகும் தொடர்ந்த சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் இதனை கண்காணித்து வந்ததன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் உட்கோட்டவாரியாக உள்ள காவல் நிலையங்களில் செல்போன்களை தொலைத்தவர்கள் தூத்துக்குடி உட்கோட்ட காவல்நிலையங்களில் 25 பேரும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திலிருந்து 7 பேரும், திருச்செந்தூர் உட்கோட்டத்திலிருந்து 5 பேரும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திலிருந்து 6 பேரும், மணியாச்சி உட்கோட்டத்திலிருந்து 4 பேரும், கோவில்பட்டி உட்கோட்டத்திலிருந்து 8 பேரும், விளாத்திக்குளம் உட்கோட்டத்திலிருந்து 4 பேரும், சாத்தான்குளம் உட்கோட்டத்திலிருந்து ஒருவரும் மொத்தம் 60 பேருடைய செல்போன்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 6,00,000/- ஆகும். அவற்றை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீன் குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆகியோர் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி மற்றும் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து உள்ளிட்;ட காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment