DINAVEL DAILY # தர்மபுரி மாவட்ட செய்தியாளர்செ.மோகன்ராஜ்தருமபுரி மாவட்டம், கெட்டுப்பட்டி கிராமத்தில், அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுபாட்டில்களை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அதிரடியாக சென்று பறிமுதல் செய்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இரவு பகலாக விற்பனை செய்து வந்துள்ளனர். அப்பகுதியில் விற்பனை செய்யும் மதுபாட்டில்களை வாங்க வரும் குடிமகன்கள் குடித்துவிட்டு மது போதையில் அங்குள்ள ஆடுகளையும் மற்றும் கோழிகளையும் திருடி செல்வது மட்டும் அல்லாமல் பெண்களை கேலி செய்வதும் வீடுகள் முன்பு சிறு நீர் கழிப்பது என குடிமகன்களால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்த அக்கிராம மக்கள் இது குறித்து தொப்பூர் காவல்நியைத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் பொதுமக்கள் புகார் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனாலும் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் இக்கிராம மக்களின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததையடுத்து இறுதியாக தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கெட்டுப்பட்டி கிராமத்திற்கு நேரடியாக சென்று மது விற்பனை செய்த வீடுகளில் அதிரடியாக நுழைந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் உள்ளே பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 177 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட பிறகு தொப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர் அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை ஒப்படைத்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர்களை தடுக்க முடியாத நிலையில் இன்று தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அக்கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தர்மபுரி மாவட்ட செய்தியாளர்
செ.மோகன்ராஜ்


தருமபுரி மாவட்டம், கெட்டுப்பட்டி கிராமத்தில், அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுபாட்டில்களை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அதிரடியாக சென்று பறிமுதல் செய்தார்.


 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இரவு பகலாக விற்பனை செய்து வந்துள்ளனர். அப்பகுதியில் விற்பனை செய்யும் மதுபாட்டில்களை வாங்க வரும் குடிமகன்கள் குடித்துவிட்டு மது போதையில் அங்குள்ள ஆடுகளையும் மற்றும் கோழிகளையும் திருடி செல்வது மட்டும் அல்லாமல் பெண்களை கேலி செய்வதும் வீடுகள் முன்பு சிறு நீர் கழிப்பது என குடிமகன்களால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்த அக்கிராம மக்கள் இது குறித்து தொப்பூர் காவல்நியைத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் பொதுமக்கள் புகார் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனாலும் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் இக்கிராம மக்களின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததையடுத்து இறுதியாக தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கெட்டுப்பட்டி கிராமத்திற்கு நேரடியாக சென்று மது விற்பனை செய்த வீடுகளில் அதிரடியாக நுழைந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் உள்ளே பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 177 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட பிறகு தொப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர் அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை ஒப்படைத்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர்களை தடுக்க முடியாத நிலையில் இன்று தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அக்கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா