DINAVEL DAILY # கேடயம் திட்டம்,சாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு
கேடயம் திட்டம்,சாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மதன் அவர்கள் 09.12.2020 அன்று அரியலூர் நகரம் கல்லங்குறிச்சி ரவுண்டானாவில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பெண்களுக்கு கொரானா பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, Virtual Cop மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்களுக்கு எதிரான வன்முறையில் இருந்து பாதுகாக்கும் கேடயம் திட்டத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் கேடயம் திட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வழங்கி *கேடயம் திட்டத்தின் உதவி எண்களை (6383071800,9384501999)* தங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் கொண்டு செல்ல கேட்டுக்கொண்டார். மேலும் Virtual Cop குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் தங்களது அலைபேசியில் *Virtual Cop Install செய்யும் முறை* குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உடன் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் உடன் இருந்தார்.
Comments
Post a Comment