DINAVEL DAILY # குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உழவர் விழா தென் தாமரைகுளத்தில் நடைபெற்றது


குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உழவர் விழா தென் தாமரைகுளத்தில் நடைபெற்றது.
 
கன்னியாகுமரி டிச 10

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏராளமான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிசான் கோஸ்திஸ் உழவர் விழா தென் தாமரைக்குளத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வேளாண்மை துணை இயக்குனர் (அட்மா திட்டம்) அவ்வை மீனாட்சி தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியை செல்வராணி, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் அப்துல் ரசாக், அகஸ்தீஸ்வரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சரண்யா, அகஸ்தீஸ்வரம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன், வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு என்னென்ன உரங்களை எவ்வெப்போது இட வேண்டும் என்பது குறித்தும், பயிர்கள் மற்றும் மரங்களை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள் குறித்தும், அவற்றை எவ்வாறு அழிப்பது என்பது குறித்தும், விவசாயிகளுக்கு பயனுள்ள பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்தும், பல்வேறு கால்நடை திட்டங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை அகஸ்தீஸ்வரம் வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப வட்டார மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங், அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் ஜெயக்குமாரி, நாகலெட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா