DINAVEL DAILY # இராஜபாளையம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி


இராஜபாளையம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டார த்தில் அட்மா திட்டத்தின் கீழ் மேலராஜகுலராமன் மற்றும் வடகரை கிராமங்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, நுண்ணீர் பாசனம், மண் பரிசோதனை, மக்காச்சோளம் படைப்பூழுவை கட்டுப்படுத்தும் முறைகள், பருத்தி பயிர் பாதுகாப்பு முறைகள், பயறு வகைகளுக்கு 2% டிஏபி கரைசல் தெளித்தல் போன்றவை கிராமிய பாடல்கள் மூலம் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையா, வேளாண்மை அலுவலர் தனலட்சுமி , உதவி வேளாண்மை அலுவலர்கள் சுருளிசாமி,வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர் வனஜா மற்றும் பிரபு செய்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.