DINAVEL DAILY # பள்ளியாடியில் தமிழக காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.



பள்ளியாடியில் தமிழக காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

கன்னியாகுமரி டிச: 10


 தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74வது பிறந்த நாள் விழா கட்சிக் கொடி ஏற்றி,₹ இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் பட்டதாரிகள் அணி குமரி கிழக்கு மாவட்ட தலைவர் பென்றசல் தலைமை தாங்கினர்.சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

நிகழ்ச்சியில் வாள்வச்சகோஷ்டம் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் டைன்ஸ் குமார் முன்னிலை வகித்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜாய் போன், முளகுமுடு பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.