# DINAVEL NEWS # சத்துவாச்சாரியில் நீச்சல் குளத்தை கலெக்டர் ஆய்வு.




சத்துவாச்சாரியில் நீச்சல் குளத்தை கலெக்டர் ஆய்வு.....

வேலூர் சத்துவாச்சாரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசு சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் கட்டப்பட்டதே இந்த குளம் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை இதனால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தனியார் நீச்சல் குளத்தை தேடிச் சென்றனர் இந்த நீச்சல் குளத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இந்நிலையில் கலெக்டர் சண்முகம் சுந்தரம் இன்று காலை இந்த நீச்சல் குளத்தை நேரில் சென்று ஆய்வு செய்து கூறியதாவது.. இந்த நீச்சல் குளம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் ஏறும் மாநகராட்சி வருவாய் துறை குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோர் இணைந்து கண்காணிக்க வேண்டும் மேலும் இந்த நீச்சல் குளம் நுழைவு வாயிலில் சிசிடிவி கேமரா மற்றும் விளக்குகள் அமைக்கப்படும் இது என்னுடைய நிதியிலிருந்து அமைக்கப்படும் மேலும் குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் இதில் இரண்டாவது மண்டல அலுவலர் மதிவாணன் மற்றும் தாசில்தார் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா