# தினவேல் செய்திகள் # தொடர்ந்து நான்காவது நாளாக குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.



மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி  மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர்  வில்சன் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் இன்று திருவனந்தபுரம் கரமனை அருகே பேருந்து நிலையம் அருகே கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் தனி படையினர் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து நான்காவது நாளாக குற்றவாளிகளிடம் விசாரணை.  
கன்னியாகுமரி மாவட்டம்   களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும்  நாகர்கோவில் நீதி மன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி அருள் முருகன்  முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பத்து நாட்கள் விசாரனைக்காக போலிஸ் காவலில் எடுத்தனர். இரண்டு நாட்கள் நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்தி வந்தனர். நாகர்கோவிலில்   நேற்று முன் தினம் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் கூறியதை தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து தனி படையினர்   அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவருடன் இன்று கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே சென்று அங்குள்ள சாக்கடை ஓடையில் போலீசார் இறங்கி ஒரு மணி நேரமாக தேடி துப்பாக்கியை மீட்டனர். கொலைக்கு பயன்படுத்திய 7.65 mm  பிஸ்டல் மற்றும் ஐந்து தோட்டாக்கள் பறிமுதல்செய்தனர். நான்காவது நாளாக இன்று குற்றவாளிகளுடன் சென்று திருவனத்தபுரத்தில்  கரமனை அருகே பேருந்து நிலையம் அருகே கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் தனி படையினர் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து நான்காவது நாளாக குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா