# DINAVEL NEWS # 1000 வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று முக்கியத்துவமிக்க சிதிலமடைந்த இரணியல் கோட்டையை சுத்தப்படுத்தும் பணியில் கன்னியாகுமரி மாவட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.



மணிகுமார்
நாகர்கோவில்



1000 வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று முக்கியத்துவமிக்க சிதிலமடைந்த இரணியல் கோட்டையை சுத்தப்படுத்தும் பணியில் கன்னியாகுமரி மாவட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமரி மண்ணின் இந்த வரலாற்று தலம் காக்கப்பட வேண்டும் என ராணுவ வீரர்கள் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்கள் கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பின் மூலமாக மாவட்டம் முழுவதும் பொது இடங்களை தூய்மை படுத்துவதும் பசுமை பரமாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்... கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பின் சமூக நல பணிகள் அரசு தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.. அந்த வகையில் 25 வது களப்பணியாக இன்று 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிதிலமடைந்த இரணியல் அரண்மனையை சுத்தப்படுத்தும் பணியில் இன்று ஈடுபட்டனர்... மேலும்  குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வரலாற்று தலம் அழிந்து போய்விடாமல் அரசு பாதுகாக்க வேண்டும் என ராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா