# DINAVEL NEWS # கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலிஸ் காவலில் உள்ள குற்றவாளிகள் குறித்த தேசிய அளவிலான தொடர்புகளை விசாரிக்க தற்போதைய கால அவகாசம் போதாது என்பதால், கூடுதல் கால அவகாசம் கோரியும், விசாரணையில் இதுவரையில் கிடைத்த விவரங்களையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நாளை போலீசார் தாக்கல் செய்ய உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்.



மணிகுமார்
நாகர்கோவில்


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி  பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலிஸ் காவலில் உள்ள குற்றவாளிகள் குறித்த தேசிய அளவிலான தொடர்புகளை விசாரிக்க தற்போதைய கால அவகாசம் போதாது என்பதால், கூடுதல் கால அவகாசம் கோரியும், விசாரணையில் இதுவரையில் கிடைத்த விவரங்களையும்  நாகர்கோவில்  நீதிமன்றத்தில்  நாளை போலீசார் தாக்கல் செய்ய உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்.       

       கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில்  எஸ்.ஐ.வில்சன் கடந்த எட்டாம் தேதி மர்ம நபர்களால்  கொலை செய்யப்பட்டார். இந்த  வழக்கில் அப்துல் சமீம், தௌபீக்  ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் அவர்களை பத்து நாட்கள்  நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில்  எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே துப்பாக்கி மீட்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே கொலைக்கு பயன்படுத்திய கத்தி மீட்கப்பட்டது. 


கொலையாளிகள்  கொலைக்கு முன்  நெய்யாற்றின்கரை பகுதியில்  தங்கி இருந்துள்ளனர். போலீஸ் அந்த  இடத்தில்  சோதனை மேற்கொண்டனர். கொலையாளிகளின் பேக், துணி மற்றும் அதில் இருந்த ஆவணம் மீட்கப்பட்டது. அதில் கத்தி வாங்கிய ரசீது, “ இந்தியா இஸ்லாம் நாடாக மாறும் வரை போராடுவோம் போராளிகள். எங்கள் தலைவர் காஜா பாய்  எங்கள் இயக்கம்  ISI “ என  எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனிடையே நேற்று குற்றவாளிகள் இருவரும்  பலத்த போலிஸ் பாதுகாப்புடன் களியக்காவிளை சோதனை சாவடிக்கு அழைத்து வரப்பட்டு  சோதனை சாவடியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை எப்படி கொலை செய்தோம் என தத்ரூபமாக நடித்து காட்டினர். இந்நிலையில் குற்றவாளிகளின் செயல்பாடுகள், அவர்களிடமிருந்து பெறப்பட்ட விபரங்கள், ஆயுத பரிமாற்றம் போன்ற பல்வேறு விபரங்களை போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு அகில இந்திய அளவிலான தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை படுவதால்  மீண்டும் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக போலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா