# DINAVEL NEWS # தேசிய அளவிலான வளைய பந்து போட்டியில் தமிழகம் அணி சாம்பியன்.



தேசிய அளவிலான வளைய பந்து போட்டியில் தமிழகம் அணி சாம்பியன்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மினி விளையாட்டு அரங்கில் நடைப்பெற்ற 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு  தேசிய அளவில் 12அணிகள் பங்கேற்ற  வளைய பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.

ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை புதுச்சேரி அணியும் மூன்றாம் இடத்தை ஆந்திரா அணியும் பிடித்தது.

பெண்கள் பிரிவில் 
இரண்டாம் இடத்தை ஆந்திரா அணியும் மூன்றாம் இடத்தை சத்தீஸ்கர் அணியும் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கோப்பையை வழங்கி சான்றிதழ் வழங்கினார்.

இந்த போட்டியில் முதல் இடம் பிடித்த தமிழக அணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி அவர்களால் 2லட்சம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள்  முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் திருப்பத்தூர் மாவட்ட கைப்பந்து விளையாட்டு மாவட்ட தலைவரும்  ஜோலார்பேட்டை நகர  கழகம் செயளாளர் எஸ்.பி.சீனிவாசன் மற்றும்  ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா