# DINAVEL NEWS TODAY # அரூர் அருகே பெற்றோரின் நிலத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்திய பாசக்கார மகன்கள்



அரூர் அருகே பெற்றோரின் நிலத்தை அபகரித்து வீட்டை விட்டு துரத்திய பாசக்கார மகன்கள்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது R.S.தொட்டம்பட்டி இவ்வூரை சேர்ந்த விவசாயி சின்னதுரை (65) இவரது மனைவி அமுதா (55) இவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் ஹரிகுமார் (45)இளையவன் சிவகுமார் (37) அமுதா என்பவருக்கு சொந்தமாக 2.74 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அந்த சொத்து எங்கள் பெயரில் இருந்தால் வங்கி கடன் பெற்று புதியதாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்று இரு மகன்களும் ஆசை வார்த்தை கூறி எங்கள் நிலத்தை 30 6 2016 ஆம் தேதி அன்று அவர்களுக்கு எழுதி கொடுத்தோம் எங்களது உறவினரிடம் 20 லட்ச ரூபாய் கடனாக பெற்று இரு மகன்களுக்கும் தலா 10 லட்சம் வாங்கி கொடுத்தோம் பிறகு என்னையும் எனது கணவரையும் தாக்கினார்கள் நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம் புகாரை வாங்க மறுத்து விட்டனர். என்னையும் எனது கணவரையும் வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள்  இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தோம் புகாரின் மீது அரூர் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்து இருவரும் எங்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அருர் வருவாய் கோட்டாட்சியர் கடந்த 11 2 2020 ஆம் தேதி  உத்தரவிட்டார். இதுநாள் வரையில் அந்த 2,000 ரூபாயும் வழங்காமல் எங்கள் இருவரையும் வீட்டைவிட்டு துரத்தி விட்டார்கள் நாங்கள் இருவரும் காட்டில் சமைத்து வசித்து வருகிறோம் எங்களுக்கு மீண்டும் நாங்கள் பதிவு செய்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என பாதிக்கப்பட்டோர் கூறினார் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னதுரை அமுதா குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா