DINAVEL NEWS TODAY # திருப்பூர் அனுப்பர்பாளையம் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மூலம் இன்று அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் செருப்பு தைக்கும் தொழிலாளியான இராமன் வயது 55 இவருக்கு வாய்பேச முடியாத, ஒரு கை செயல்படாத நிலையில் பரிதவித்த மாற்றுத்திறனாளிக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்
திருப்பூர் அனுப்பர்பாளையம் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மூலம் இன்று அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் செருப்பு தைக்கும் தொழிலாளியான இராமன் வயது 55 இவருக்கு வாய்பேச முடியாத, ஒரு கை செயல்படாத நிலையில் பரிதவித்த மாற்றுத்திறனாளிக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்
திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ் ஆகிய எனது மகள் படித்து வரும் திருப்பூர் அவினாசி பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எனது மகள் திவ்யா எட்டாம் வகுப்பு படித்து வருகின்றாள்..அந்த பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ் அரசு வழங்கிய கொரோனா பேரிடர் நிவாரணப் பொருட்களான அரிசி, பருப்பு என இப்பொருளை பெற்றுக்கொள்ள பள்ளி ஆசிரியை அவர்கள் தொடர்பு கொண்டு எங்களையும் வரச்சொல்லி இருந்தார்கள்..
இதனைத் தொடர்ந்து இன்று காலை 10: 30 மணி சுமார்க்கு வீட்டில் இருந்து எனது மனைவியும் நானும் எனது மகள் திவ்யா பாடிக்கும் பள்ளிக்கு சென்றிருந்தோம்.
அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் எனது வாகனத்தை நிறுத்தி விட்டு தாம் வெளியில் நிற்க்கின்றேன் என மனைவியிடம் கூறி விட்டு எனது மனைவி சிவகாமி அவர்களை மட்டும் பள்ளிக்கு உள்ளே அனுப்பி சத்துணவு கூடத்தின் ஆசிரியை பார்த்து நமது மகளின் பெயர் திவ்யா என பெயரை பதிவிட்டு அந்த நிவாரனப் பொருட்களை வாங்கி வா என மனைவிடம் சொல்லி விட்டு பள்ளி நுலைவு வாயிலில் நின்று கொண்டிருந்த போது ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனவேதனையில் இருப்பதை அறிந்தேன்...சற்று அந்த முதியவர் பக்கம் சென்று மெல்ல பேசத் தொடங்கினேன் சற்று திக்கி... திக்கி...விம்மி விம்மி தன்னைப் பற்றி கூட சொல்ல முடியாமல் வார்த்தைகளை பாதி பாதியாக சொல்லத் துடித்த போது அவரது கண்ணில் கண்ணீர் துளி மட்டுமே அதிகம் வடிந்தோடியது..அவரது வார்த்தையை கேட்க எனக்கே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிட...அவரின் மனதை ஆருதல்படுத்தி மேலும் பேசத் தொடர்ந்தேன் அந்த முதியவர் இராமனிடம்..
ஐய்யா நீங்க யாரு ஏன் இந்த சூழ்நிலையிலும் செருப்பு தைக்கும் தொழில் இருக்கிங்க என அவரிடம் விசாரிக்க ஐய்யா எனது பெயர் இராமன் எனக்கு வயது 55 எனது மனைவி பூவாத்தாள் அவள் இறந்து பல வருடங்கள் ஆகின்றது.. குழந்தைகள் ஆண்கள்3, பெண்கள் 2, இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி அவரவர் பல இடங்களில் இருக்காங்க என மனவருத்தமுடன் சொல்லி விட்டு தனது கை கால்கள் ஊனமாகியிருந்தாலும் யாரிடமும் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தக் கூடாது என்ற ஒரே நம்பிக்கையில் எனக்கு பக்கவாதம் ஏற்ப்பட்டு வாய் பேச முடியாத நிலையாலும், ஒரு கை செயல் இழந்து போனாலும் பலரது கால் செருப்புக்களை தைத்தாவது அதில் கிடைக்கும் சொர்ப வருமானத்தை வைத்து என் வயிற்று பிழைப்பை நடத்தி வருகின்றேன் ஐய்யா என கதகதத்தார் முதியவர்..
அந்த முதியவர் பேசிய வார்த்தைகள் என்னவோ என் மனதை பெரிதும் நெருட வைத்தது..இப்படியே சுமார் 1 மணி நேரம் அந்த முதியவரை நோக்கியே என் பார்வைகளும் பேச்சுகளும் போய் கொண்டிருந்தது.
சிறிது நேரம் சென்ற உடன் எனது மனைவியும் பள்ளியை விட்டு வெளியில் வந்தவள் குரள் தந்தாள்...வா வா.. தாயே என எனது மனைவையை அழைத்து நீ வாங்கி வந்த கொரோனா பேரிடர் நிவாரனப் பொருளான அரிசியையும், துவரம்பருப்பையும் இந்த இராமன் ஐய்யா முதியவருக்கு கொடுத்து விடுவோம் என சொல்லிய மறுகணமே எனது மனைவி சிவகாமி அம்மையார் என்ன ஏதுன்னு கூட கேட்காமல் கொடுத்து விடலாமே என அந்த அரிசி பருப்பை அந்த முதியவரிடம் மகிழ்வோடு தந்து விட்டு வாங்க போலாம் என எனது மனைவி அந்த முதியவரிடம் கையெடுத்து கும்பிட்டு விட்டு மெல்ல நகர்ந்தார்..
பின் டூவிலரில் ஏறி உட்கார்ந்த மனைவிடம் தாம் ஒரு கணவர் என்கின்ற முறையில் மனைவிடம் மெதுவாக பேசத் தொடர்ந்தேன் சிவகாமித் தாயே நம் மகள் திவ்யாவிற்க்கு அவளது பள்ளியில் வழங்கிய நிவாரனப் பொருளை எங்கே என கேட்டாள் என்ன சொல்வாய் சொல்லேன் என ஆருதலாய் கேட்ட போது மனைவியின் மந்திரச் சொல்லே மனசு நிறைவான வார்த்தையை தந்தாள் எனது மனைவி...நம் வாழ்க்கையை விட பிறரது வாழ்க்கையில் பசியோடு இருப்பவரின் மனம் அறிந்து உதவிட்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்மென வார்த்தையில் விவரித்தாள் சிவகாமி அம்மையார்...இப்படி பேசிட்டே திரும்பவும் அவினாசியில் இருந்து எங்கள் வீட்டை வந்தடைய ஆத்துப்பாளையம் பாரதி நகர் வீதிக்குள் நுலைந்த மறுகணமே எனது மகள் திவ்யா வீட்டு வாசல் படி வெளியே வந்த ஆர்வமாய் அம்மா...அம்மா எங்கம்மா என் பள்ளிக்கு போனிங்களே எங்க சத்துணவு கூடத்தில் அரசு வழங்கிய கொரோனா பேரிடர் நிவாரணப் பொருட்களான அரிசியும்,துவரம்பருப்பும் எங்கே என எனது அன்பு மகள் திவ்யா பூரிப்பாய் கேட்டாள்..
எனது மனைவி சிவகாமியும் நானும் உங்க தாத்தாவிற்க்கு கொடுத்து உதவி விட்டு வந்து விட்டோம்..என்று சொல்லிய போது சற்று எனது மகள் தற்போது நடந்த விபரம் என்ன என தெரியாமலே ஓ அப்படியா அப்பா நீங்க எப்போதும் போன்று பல ஆதரவற்ற சாலையோர மனநிலை பாதித்தோர்க்கும், நடக்க இயலாத வயது முதிந்தோர்க்கு உதவி வரும் நோக்கில் யாரையாவது சந்திச்சு இருப்பார் அப்பா அதனால் எனக்கு வழங்கிய நிவாரணப் பொருளை முதியவர்களுக்கு வழங்கி இருப்பார் என எனது மனைவியிடமும் என்னிடமும் புன்னைகையுடன் சொல்லிவிட்டு செல்லமாய் நகர்ந்தாள் எனது அன்பு மகள் திவ்யா..
எனக்கு கிடைத்த எந்த பொருளையும் ஏழை எளியோர்க்கு பகிர்ந்து அளித்து விட்டு வாழ்வதே எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் இலக்கு....மகிழ்வுடன் எனது மனைவி சிவகாமி தெய்வராஜ்...
என்னென்றும் சமூகப் பணியில் குடும்ப உறவாகவும் சமூக உறவாகவும் பயணிப்போம்....
திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை..தொடர்பு எண்: 9442372611/ 9489404911
Comments
Post a Comment