சென்னையிலிருந்து செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வந்து தங்கியிருந்த 172 பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். செய்யாறு,மே.3: சென்னையிலிருந்து செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வந்து தங்கியிருந்த 172 பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை கிராம அளவில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில்860 குழுக்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு பணிகளை தொடங்கினர். செய்யாறு அரசு பாலிடெக்னிக் விடுதி தூய்மை படுத்தபட்டு விடுதி தயார் செய்து சுகாதார துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து ஊரக மற்றும் கிராம பகுதிகளுக்கு வந்தவர்களை அந்தந்த பகுதி தகவலின் அடிப்படையில் வருவாய்துறை, ஊரகதுறை, காவல்துறை, மருத்துவதுறை பணியாளர்கள் கொண்ட குழு கண்காணித்து வாகனங்கள் , ஆம்புலன்ஸ்கள் மூலம் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொண்டு வந்து அவர்களை முறையாக ப...