Dinavel News Today # செங்கம் அருகே ஆயிரம் லிட்டர் கள்ளசாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர்




செங்கம் அருகே ஆயிரம் லிட்டர் கள்ளசாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கீழ் ஆனைமங்கலம் தரை காட்டில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை டெல்டா போர்ஸ் காவலர்கள் அதிரடியாக சுமார் 10க்கும் மேற்பட்டோர் காட்டில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது  நான்கு பேரல்களில் சுமார் 1000 லிட்டர் கள்ள சாராய ஊறல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர் அதன் பிறகு அதனை அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர் எதனால் அப்பகுதி மக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்

நாடு முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க தமிழக அரசு அரசு மதுபானங்களை மூடி விட்டதால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோதிகள் செங்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம் ஆறு வனப்பகுதி போன்ற இடங்களில் அதிக அளவில் கள்ளசாராயம் ஊறல்களை பதுக்கி வைத்து அதனை இரவு மற்றும் பகல் நேரங்களில் காய்ச்சி விற்பனைக்காக தோக்கவாடி பரமனந்தல் மண்மலை நாச்சிப்பட்டு புளியம்பட்டி காயம்பட்டு வளையாம்பட்டு போன்ற கிராமங்களுக்கு கொடுத்து விடுகின்றனர் இதனால் காவல்துறையினர் எவ்வளவு கட்டுப் படுத்தினாலும் அதனை சிறிதளவும் கண்டு பயப்படாதே சிலர் தொடர்ந்து இதே போன்று கள்ளச்சாராயம் காய்ச்சுவதுதிலும் விற்பதிலும் அதிகளவில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.