Dinavel News Today # திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் திமுக சார்பில் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிஒன்றியக் குழு தலைவர் ஒ.ஜோதி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் திமுக சார்பில் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி
ஒன்றியக் குழு தலைவர் ஒ.ஜோதி வழங்கினார்.
செய்யாறு, மே.1:
செய்யாறு ஒன்றியம் திமுக சார்பில் 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் தெற்று பரவுவதலைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய - மாநில அரசு 144 தடையுத்தரவை பிறப்பித்து உள்ளது. அந்த தடையுத்தரவின் காரணமாக காழியூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் விவசாயி வேலைக்குச் செல்ல முடியாமலும், கூலி வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேப் போல் அப்பகுதியில் வசித்து வரும் இருளர் இன மக்கள், தலித் மக்கள் ஆகியோர் வெளியில் செல்ல முடியாமல் உணவின்றி தவித்து வந்ததாகத் தெரிகிறது. .
இதனை அறிந்த திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அறிவுரையின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.பார்வதி சீனிவாசன் மேற்பார்வையில், செய்யாறு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒ.ஜோதி, துணைத் தலைவர் ஆர்.வி.பாஸ்கர், ஒன்றியக்கவுன்சிலர் ஞானவேல் ஆகியோர் காழியூர் கிராமத்தில் உள்ள 500 குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி, ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறி தொகுப்பு ஆகியவற்றை நிவாரண உதவியாக வழங்கினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி அருள் மற்றும் செய்யாறு ஒன்றியம் திமுகவினர் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment