Dinavel News Today # சென்னையிலிருந்து செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வந்து தங்கியிருந்த 172 பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


சென்னையிலிருந்து செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வந்து தங்கியிருந்த 172 பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

செய்யாறு,மே.3: 

சென்னையிலிருந்து செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வந்து தங்கியிருந்த 172  பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை கிராம அளவில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில்860 குழுக்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு பணிகளை தொடங்கினர். செய்யாறு  அரசு பாலிடெக்னிக் விடுதி தூய்மை படுத்தபட்டு விடுதி தயார் செய்து சுகாதார துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து ஊரக மற்றும் கிராம பகுதிகளுக்கு  வந்தவர்களை அந்தந்த பகுதி தகவலின் அடிப்படையில் வருவாய்துறை, ஊரகதுறை, காவல்துறை, மருத்துவதுறை பணியாளர்கள் கொண்ட குழு கண்காணித்து வாகனங்கள் , ஆம்புலன்ஸ்கள் மூலம் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொண்டு வந்து அவர்களை முறையாக பதிவு செய்து அவர்களுக்கு சளி பரிசோதனைகளை செய்து வருகின்றனர். அரசு பாலிடெக்னிக் விடுதிகள் நிரம்பியுள்ளன. மேலும் கூடுதல் கட்டிடங்களை தூய்மைபடுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் சென்னையில் பரிசோதனை செய்து 14 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்து வீட்டிலேயே 14 நாட்களாக உள்ளோம். எங்களையும் மீண்டும் பரிசோதனை செய்து அடைத்தால் எப்படி? என கேள்வி எழுப்பினர். சளி மாதிரி பரிசோதனை செய்து முடிவுகள் வெளியானதும் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் என காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். போதுமான ரூம்கள் தனிமைப்டுத்தபட்டவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்.  தனிமைப்படுத்தபட்ட பகுதியில் கூட்டமாக நிற்பதை தவிரத்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் காவல்துறையினரும், சுகாதார துறையினரும் தகுந்த பாதுகாப்போடு பணி மேற்கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.