Dinavel News Today # " நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை " பிறக்கும் போதும் எதையும் கொண்டுவருதில்லை, இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை அது தான் உண்மை என கருதி ஆபத்து வரும் போது அவசர உதவிக்கு கை கொடுப்பதே அமைப்பின் நோக்கம்

இன்றைய சூழ்நிலையில் கடந்த 40 நாளுக்கு மேலாக கொரோனா தொற்று வைரஸ் எனும் கொடிய நோயால் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அரசு பிரப்பித்த 144 தடை உத்தரவை மதிக்கும் வகையில் ஆங்காங்கே பெரும் பாதுகாப்பு கருதி அவரவர் தங்கள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் எங்களது சேவைப்பணியினை இடை விடாது பல கட்டங்களில் சேவையாற்றியும் வருகின்றோம்.

இந்த நிலையில் நேற்று 02-05-2020  சனியன்று சுமார் மதியம் 12 மணி சுமார்க்கு திடீர் அழைப்பு வந்தது..ஒரு நிறைமாத கர்ப்பினி திருப்பூரில் இருந்து கோவை அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டி அவசரமாக அழைத்தார்கள். உடன் தாம் அந்த தம்பதியரிடம் விசாரித்த போது  சார் வணக்கம் எனக்கு குழந்தை பிறப்பதற்க்கான தேதி நிர்னையக்கப்பட்டு மருத்துவர்கள் கூறிவிட்ட இந்த சூழ்நிலையில் அரசு ஊரடங்கு பிரப்பித்த நிலையால் கார் டாக்ஸி அனுமதி பெற்று உடன் செல்ல இயலாத இக்கட்டான சூழ்நிலை எனவும் மனவேதனையுடனும் நிறைமாத அவசரவலியுடனும் இருக்கின்றேன் ஆதலால் உடன் தங்களின் ஆம்புலன்ஸ் மூலம் என்னை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அந்த பெண்மணி குடும்பத்தார் முறையிட்டார்கள்..இதனை கேள்விப்பட்டு உடன் எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் அந்த நிறைமாத தம்பதியரை பாதுகாப்புடன் ஏற்றி அவசர உதவியா கோவை விரைந்துச்  சென்று நிறை மாத கர்ப்பினி பெண்ணை இருக்கிவிட்டோம்...அடுத்த கணம் அதே கோவை அரசு மருத்துவமனையில்  ஒரு தம்பதியர் பெயர் அஜினி வயது 34 இவருக்கு  பிறந்து 5 நாளே ஆன கைக்குழந்தையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனை வாசலில் காலை முதல் மாலை 3 மணிவரை காத்திருந்து வெவ்வேறு ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு சில வாகனங்களை கேட்டும் ஏற்ற மறுக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் அவதிப்பட்டு வந்த இந்த தம்பதியரையும் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து எங்களது திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை  ஆம்புலன்ஸ் மூலம்   குழந்தை பிறந்த தாயையும் குழந்தையையும்  பாதுகாப்புடன் அழைத்திட்டு பாப்பநாயக்கன்பாளையத்தில் குடியிருக்கும் அவரது வீட்டில் பாதுகாப்புடன் இறக்கி விட்டு மகிழ்வோடு எங்கள் ஆம்புலன்ஸ் அவரது வீட்டை விட்டு கடந்து செல்ல முற்ப்பட்ட போது அஜினி தாய் கையெடுத்து கும்பிட்டு விட்டு வீட்டிற்க்குள் நகர்ந்தார்..அந்த மகிழ்வு எங்களுக்கு ஓர் ஆத்ம திருப்தியளித்தது...பிறக்கும் போதும் எதையும் கொண்டுவர போவதில்லை...இறக்கும் போதும் எதையும்  கொண்டு போவதில்லை..அது தான் உண்மை என கருதி ஆபத்து வரும் போது அவசர உதவிக்கு கை கொடுப்பதே எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பின் நோக்கம் என்று மகிழ்வுடன் கூறுகின்றோம்.

..

இச்சேவைப்பணியில் அறக்கட்டளை நிறுவனர் ந. தெய்வராஜ், செல்வம் ஈடுப்பட்டுள்ளோம்..

இப்படிக்கு 
ந. தெய்வராஜ் (நிறுவனர்)
நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை திருப்பூர்.. 
செல்: 9442372611.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா