Dinavel News Today # செங்கம் அருகே கள்ள சாராய விற்பனையை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

செங்கம் அருகே கள்ள சாராய விற்பனையை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பொன்னி தண்டா பகுதியை சேர்ந்த கம்சலா ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த அன்பு வசந்தா குப்பன் முருகேசன் ஆகியோர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி தொடர்ந்து விற்று வருவதால் கள்ள சாராயத்தை குடிக்க வரும் நபர்கள் விவசாய நிலத்தில் உண்மை பயிர்களை மிதித்து சேதப்படுத்தி விடுவதாக அதனை தட்டிக் கேட்க சென்ற கம்சலா தனது நிலத்தில் சாராயம் விற்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார் இல்லையென்றால் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துவிடுவதாக கூறியதற்கு ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் கம்சலா மற்றும் அவரது கணவர் ராஜரத்தினத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் போவதாக சொல்லிவிட்டு வந்த கம்சலா மற்றும் அவரது கணவரை வீட்டின் அருகே சென்று அவர்களிடம் வம்பு வளர்த்துள்ளார்கள் சாராய வியாபாரிகள்  பின்பு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அன்பு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கம்சலா கழுத்தின் மீது வெட்ட முயன்றபோது அதிர்ஷ்டவசமாக கம்சலா வலது கை மீது அரிவாள் பாய்ந்துள்ளது அதன் பிறகு கம்சலாவின் கணவர் கத்தியைப் பிடுங்க முயன்றபோது அவரையும் கண்மூடித்தனமாக தாக்கிய அந்த கும்பலை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தடுத்து கம்சலாவை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது செங்கம் பகுதியில் அதிக அளவில் கள்ளசாராயம் விற்பனை களைகட்டி வருவதால் தங்களது விவசாய நிலத்தில் கள்ளசாராயம் காய்ச்சி விற்பதை தட்டிக் கேட்ட பெண்ணை அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது தொடர்ந்து கள்ள சாராயம் விற்று வரும் இவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் 

திருவண்ணாமலை மாவட்ட
 செய்தியாளர்   S .ராமராஜ்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா