Posts

Showing posts from November, 2019

ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினவிழா

Image
ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினவிழா 26.11.2019 அன்று கொங்கனபுரம் ரெட்டி பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.  டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை நவம்பர்.26.2019 முதல் ஏப்ரல்.14.2020 வரை கொண்டாடும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி அரசியலமைப்பு தினத்தன்று டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி யின் துவக்க விழா நடைபெற்றது.  அவ்விழாவில் சட்டமேதை அவர்களின் வரலாறு மற்றும் அவரின் முக்கியத்துவம் பற்றி சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது மாணவர்கள்  ஓவிய போட்டியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படம் வரைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  மேலும் ஆசிரியர் முனியசாமி அவர்கள் இந்தியாவை பற்றி பாடலாகப் பாடி சிறப்பித்தார். இவர் குழந்தைகள் தினத்தன்று மதிப்பிற்குரிய முதல் பாரத பிரதமர் நேருவை குறித்து நேரு மாமா என்ற பாடலை பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

மேற்கு வங்காள ஆசாமியை செங்கல் சூலை உரிமையாளர் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம்

Image
கன்னியாகுமரி மாவட்டத்தில்  போதை ஊசி மருந்து, கஞ்சா விற்பனையை போலிசாரால் தடுக்க முடியாத நிலையில் ஆரல்வாய்மொழி அருகே கஞ்சா செடி வளர்த்து கஞ்சா விற்பனை செய்து வந்த மேற்கு வங்காள ஆசாமியை செங்கல் சூலை உரிமையாளர் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்த  சம்பவம் காவல்துறை வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கஞ்சா செடிகளையும் போலீசார் அளித்தனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைகாலமாக போதை ஊசி மருந்துகள் கஞ்சா ஆகியவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, கல்வி நிலையங்கள் அருகிலேயேயும், பேருந்து நிலையங்களிலும் மர்ம ஆசாமிகள் போதை பொருட்களை சர்வசாதனமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில்  ஆரல்வாய்மொழி அருகே கஞ்சா செடி வளர்த்து கஞ்சா விற்பனை செய்து வந்த மேற்கு வங்காள ஆசாமியை செங்கல் சூலை உரிமையாளர் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் போலீசாரை அதிர்சிக்கு உள்ளக்கி உள்ளது. ஆரல்வாய்மொழி சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதில் வட மாநிலங்களை சே

மத்திய பாஜக அரசையும் அவதூறாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

Image
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் மத்திய பாஜக அரசையும் அவதூறாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் மத்திய பாஜக அரசையும் காங்கிரஸ் கட்சியினரும் ராகுல் காந்தியும்  அவதூறாக பேசி வருவதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பாஜகவினர் நீதி மன்றம் வரை இந்த பிரச்னையை கொண்டு சென்று உள்ளனர்.  இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் மத்திய பாஜக அரசையும் அவதூறாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில்.  பாரதிய ஜனதா மூத்த தலைவர் எம் ஆர் காந்தி. முத்துராம். முன்னாள் நாகர்கோவில் நகர்மன்ற தலைவி மீனாதேவ். உள்பட ஏராளமானோர
Image

அ.தி.மு.க அரசியல் செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.செல்வராஜ் கோவையில் செய்தியாளர் சந்திப்பு.

Image
அ.தி.மு.க அரசியல் செய்தி தொடர்பாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.செல்வராஜ் கோவையில் செய்தியாளர் சந்திப்பு. 2021 ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும் சசிகலாவுக்கும் அதிமுக வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மேலும் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் விவகாரத்தில் அரசுக்கு தொடர்பு இல்லை அது நீதிமன்ற வேலை என்று கூறினார்.  அதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக அரசு நிச்சயமாக வெற்றிபெறும் அதை தடுக்க தி.மு.க கடுமையான முயற்சி செய்து வருகிறது என்றார்.  K.ரகுநாதன் தினவேல் கோவை மாவட்ட செய்தியாளர்.

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடந்த தி மு க பொதுக்கூட்டத்திற்க்கு கோவை தி மு க வர்த்தக அணியின் துணை த்தலைவர் டாக்டர், மாரிச்செல்வன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Image
கோவை தெப்பக்குளம் மைதானத்தில்  நடந்த தி மு க பொதுக்கூட்டத்திற்க்கு கோவை தி மு க வர்த்தக அணியின்  துணை த்தலைவர் டாக்டர், மாரிச்செல்வன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் K.ரகுநாதன் தினவேல் கோவை மாவட்ட செய்தியாளர்

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஒருநாள் ஆசிரியராக இருந்த ரெட்டிபட்டி பள்ளி மாணவன்

Image
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஒருநாள் ஆசிரியராக இருந்த ரெட்டிபட்டி பள்ளி மாணவன் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ரெட்டிபட்டி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 14.11.2019 இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இப்பள்ளியின் ஆசிரியர் திரு முனியசாமி பொறுப்பு தலைமையாசிரியர் அவர்கள் முதல் இந்திய பாரத பிரதமர்  ஜவஹர்லால் நேரு அவர்களைக் குறித்து பாடலாகப் பாடினார் பின்பு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் ஒரு நாள் ஆசிரியராக இருந்து ஆசிரியரின் கடமைகளை செய்வதன் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்  தின வேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

ரெட்டிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

Image
*ரெட்டிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்* சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ரெட்டிபட்டி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 14.11.2019 இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களை மகிழ்விக்கும் நோக்கில் நமது நிருபர்  திரு பிரபு அவர்களால் பொம்மைகள் வைத்து நீதி நெறிகள் கதைகளைச் சொல்லி குழந்தைகள் நலம் , பெண் குழந்தைகள் பாதுகாப்பு  மற்றும் குழந்தைகள் உரிமைகள் கடமைகள் குறித்து   அறிவுரைகள் வழங்கப்பட்டது மேலும் சமூக சேவகர் திரு செல்வன் அவர்களால் மாணவர்களுக்கு தேவையான சில விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது .திரு முனியசாமி பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் மாணவர்களோடு சேர்ந்து கேக் வெட்டி குழந்தைகள் தின விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது  தின வேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்

Image
ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம் தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில் கோவை இளம் பெண் படுகாயம், நா.கார்த்திக் MLA நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Image
கோவை அவினாசி ரொடு கோல்டு விங்க்ஸ் பகுதியில் அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணை ராயல் கேர் மல்ட்டி பெசாலிட்டி மருத்துவமனையில் தீவிர  சிகிச்சையில் உள்ளார், இவரை நா.கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கே.ரகுநாதன் தினவேல் கோவை மாவட்ட செய்தியாளர்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு. 5 மணி நேரம் விழிப்புணர்வு வீணை வாசித்து சாதனை படைத்த மாணவி.

Image
பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு. 5 மணி நேரம் விழிப்புணர்வு வீணை வாசித்து சாதனை படைத்த மாணவி.  விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் ஸ்ரீராமஜெயம், பிரியா . இவர்களின் மகள்  ஸ்ரீசாரதாதேவி 8 ஆம் வகுப்பு மாணவி .  இவர் சமீபத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக தொடர்ந்து 5 மணி நேரம் வீணை வாசித்து 3 கின்னஸ் சாதனைகள் பெற்றுள்ளார்.  மேலும் இவர் கூறுகையில் தனது 5 மணி நேரம் சாதனையை 8 மணி நேரமாக நிகழ்த்த போவதாகவும் அதற்கான பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். தினவேல் செய்திகளுக்காக K.வேலு விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.

சேலம் அகரம் காலனி வீடுகளில் தண்ணீர் தேக்கம்

Image
சேலம் அகரம் காலனி வீடுகளில் தண்ணீர் தேக்கம் 9-11-2019. நேரம் காலை 9:30. மணி நேற்று இரவு பெய்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கழிவு நீர்கள் வாய்க்காலில் செல்லமுடியாமல் சேலம் நெத்திமேடு அருகில் அகரம் காலனியில் வசிக்கும் வீடுகளில் கழிவு நீருடன் கலந்த தண்ணீர் புகுந்தது இதனால் வீட்டிற்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற அவர்களால் வீட்டிற்குள் சமைக்கவும் வீட்டிற்குள் படுத்து உறங்கவும் முடியாமல் தவிக்கின்றனர் இதில் படிக்கின்ற பள்ளி கல்லூரி மாணவர்களால் படிக்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர் வயதானவர்கள் வீட்டிற்குள் தண்ணீர் இருப்பதால் வீட்டிற்குள் இருக்க முடியாமல் தவிக்கின்றனர் இரவு முழுவதும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு இருக்கின்றனர் கழிவு நீருடன் கலந்து தண்ணீர் தேங்குவதால் நோய் தொற்று அபாயம் வருமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்  தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

சேலம் நெத்திமேடு போக்குவரத்து சாலையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி

Image
சேலம் நெத்திமேடு போக்குவரத்து சாலையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி 9-11-2019 , நேரம் காலை 9 மணி. சேலத்தில் நேற்று இரவு பெய்த மழையால் சேலம் நெத்திமேடு பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிக்கு முன்பாக சாலையில் நீர் தேங்கி கொண்டிருக்கிறது இதில் சாக்கடையிலிருந்து கழிவுநீரும் கலந்து நிற்கிறது இதனால் இந்த பகுதியில் வாகனத்திலோ அல்லது நடக்கவோ முடியாமல் பள்ளி கல்லூரி மாணவர்களும் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள் இதுபோன்ற மழைக்காலங்களில் இந்த சாலையில் கழிவுநீர் கலந்த தண்ணீரில் செல்வது பழகிப் போய்விட்டது என்று மனம் கசந்து சொல்கிறார்கள் இவ்வழியாக செல்கிறவர்கள். தினவேல் செய்திகளுக்காக சேலம் தெற்கு நிருபர் பிரபு

சேலம் கந்தம்பட்டி யில் காற்று நிரப்பும் கம்ப்ரஸர் சிலிண்டர் வெடித்ததில் பள்ளி மாணவன் கை துண்டிப்பு

Image
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி யில் காற்று நிரப்பும் கம்ப்ரஸர் சிலிண்டர் வெடித்ததில் பள்ளி மாணவன் கை துண்டானது 8-11-2019 இன்று காலை சுமார் 9 மணி அளவில் சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் அருகில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் பட்டறை உள்ளது  சம்பவ நேரத்தில் பட்டறை ஊழியர்கள் கண்டனர் லாரிக்கு காற்று பிடிக்கும் போது கம்ப்ரசர் சிலிண்டர் வெடித்து சிலிண்டரின் ஒருபக்க மூடி கழன்று அருகிலிருந்த கன்டெய்னர் லாரியில் அடித்து  சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள ஓடு வீட்டில் விழுந்ததில் அந்த வீட்டில் பள்ளிக்கு செல்ல தயாராகி சாப்பிட்டு கொண்டிருந்த 5 ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மௌலீஸ்வரன் மேல் விழுந்ததில் அவன் கை துண்டாகி போனது மேலும் அவனது சகோதரன்ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்  லித்திக் கிற்கும் பலத்த அடிபட்டது அங்கிருந்தவர்கள் அடிபட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பஞ்சர் பட்டறை ஊழியர்கள் உட்பட 5 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர் மேலும் தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . ஆயில் என்ஜின் மூலம
Image
M.SAKTHIVEL - SALEM DISTRICT REPORTER 9787576858