மேற்கு வங்காள ஆசாமியை செங்கல் சூலை உரிமையாளர் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம்


கன்னியாகுமரி மாவட்டத்தில்  போதை ஊசி மருந்து, கஞ்சா விற்பனையை போலிசாரால் தடுக்க முடியாத நிலையில் ஆரல்வாய்மொழி அருகே கஞ்சா செடி வளர்த்து கஞ்சா விற்பனை செய்து வந்த மேற்கு வங்காள ஆசாமியை செங்கல் சூலை உரிமையாளர் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்த  சம்பவம் காவல்துறை வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கஞ்சா செடிகளையும் போலீசார் அளித்தனர். 


கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைகாலமாக போதை ஊசி மருந்துகள் கஞ்சா ஆகியவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, கல்வி நிலையங்கள் அருகிலேயேயும், பேருந்து நிலையங்களிலும் மர்ம ஆசாமிகள் போதை பொருட்களை சர்வசாதனமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில்  ஆரல்வாய்மொழி அருகே கஞ்சா செடி வளர்த்து கஞ்சா விற்பனை செய்து வந்த மேற்கு வங்காள ஆசாமியை செங்கல் சூலை உரிமையாளர் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் போலீசாரை அதிர்சிக்கு உள்ளக்கி உள்ளது. ஆரல்வாய்மொழி சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதில் வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர்கள் பணி புரிந்து வருகின்றனர். அதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சமரோஜீட் பிஸ்வாஸ் ( வயது 33 ) என்ற இளைஞர் தான் வேலை பார்த்து வந்த செங்கல் சூலை பகுதியில் யாருக்கும் தெரியாமல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்து உள்ளார். இவரிடம் இருந்து கஞ்சா வாங்க தினசரி ஏராளமான இளங்கர்கள் வருவதை பார்த்து சந்தேகம் அடைந்த செங்கல் சூலை உரிமையாளர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து உள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணைக்கு பின்னர்  சமரோஜீட் பிஸ்வாஸ் என்ற வாலிபரை கைது செய்து கஞ்சா செடிகளும் அளித்தனர். தொடர்ந்து வேறு எங்கே எல்லாம் கஞ்சா செடி வளர்த்து உள்ளார் ? கூட்டாக சேர்ந்து கஞ்சா விவசாயம் மற்றும் விற்பனை தொழில் நடத்தபட்டு வருகிறதா ? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மணிகுமார்
தினவேல் செய்திகளுக்காக
நாகர்கோவில்


Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா