# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மணிகுமார் நாகர்கோவில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாள் திருவிழாவான இன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து முத்திரிகிணற்றங்கரையில் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்ற கோஷம் முழங்க வைகுண்டசாமி கலிவேட்டையாடினார். இந்நிகழ்ச்சிக்கு பூஜிதகுரு பாலஜனாதிபதி தலைமை வகித்தார். தொடர்ந்து தலைமை பதி அருகே உள்ள செட்டிவிளை, சாஸ்தான்கோயில்விளை,சோட்டபணிக்கன்தேரிவிளை,காமராஜபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக குதிரைவாகனத்தில் வந்த அய்யாவை பக்தர்கள் பூ பழம் போன்ற சுருள்வைத்து வழிபட்டனர். 11ம் திருவிழாவான 27ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலை கலைநிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடக்கிறது
Comments
Post a Comment